உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் பரவலாக மழை; குறிஞ்சிப்பாடியில் 72 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் பரவலாக மழை; குறிஞ்சிப்பாடியில் 72 மி.மீ., பதிவு

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வங்கக்கடலில் உருவான காற்று சுழற்சியினால் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்தது. அதன்படி நேற்று மாலை திடீரென மழை இடியுடன் கூடிய மழை பெய்தது. ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பதிவான மழையளவு வருமாறு: குறிஞ்சிப்பாடி 72 மி.மீ., பண்ருட்டி 70, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 50, தொழுதுார் 50, பெலாந்துறை 44.5, வானமாதேவி 42, கீழ்செருவாய், லக்கூர் 32.4, வடக்குத்து 31, மே மாத்துார் 30, கலெக்டர் அலுவலகம் 26, கடலுார் 24.7, ஸ்ரீமுஷ்ணம் 22.1, கொத்தவாச்சேரி 19, புவனகிரி 10, வேப்பூர் 7, சேத்தியாதோப்பு 6, சிதம்பரம் 3, காட்டுமன்னார்கோவில் 2, காட்டுமயிலுார் 2மி.மீ., மாவட்டத்தில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 72 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இரவு தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல பகுதிகளில் மின்தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை