உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்

பரங்கிப்பேட்டை: மனைவியை, காண வில்லை என கணவர் போலீ சில் புகார் செய்துள்ளார். பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 42; இவரது மனைவி மணிமேகலை, 39; இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப விவகாரத்தில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிமேகலை, வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி