மேலும் செய்திகள்
சிறுபாக்கத்தில் வாரச்சந்தை அமைக்கப்படுமா?
03-Nov-2024
சிறுபாக்கம் : மங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறுபாக்கம் அடுத்த மங்களூர் ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, ஒன்றிய அலுவலகம், கூட்டுறவு வங்கி, கனரா வங்கி, வணிக வளாகங்கள் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.இந்நிலையில், மங்களூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தீ விபத்து, பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, 20 கி.மீ., துாரமுள்ள வேப்பூர் தீயணைப்பு நிலையம், 35 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி தீயணைப்பு நிலையங்களில் மீட்பு குழுவினர் வரும் நிலை உள்ளது.இதனால், கால விரயம் ஆவதுடன், தொலைவின் காரணமாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் இழப்புகள் தவிர்க்க முடியாமல் போகிறது. எனவே, மங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
03-Nov-2024