உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேமாத்துார் அணைக்கு தண்ணீர் கிடைக்குமா? விவசாயிகள் கவலை

மேமாத்துார் அணைக்கு தண்ணீர் கிடைக்குமா? விவசாயிகள் கவலை

வேப்பூர் : மேமாத்துார் அணைக்கட்டுக்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், மணிமுக்தாறு வழியாக மேமாத்துார் அணைக்கட்டுக்கு வருகிறது. இதன் பாசன வாய்க்கால் வழியாக கொடுக்கூர் பெரிய ஏரி, சித்தேரி, சின்னக்குட்டி உடையார் உட்பட 15 கிராம ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது.இதன் மூலம், 4,500 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், 800 ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இதில், நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.கல்வராயன் மலையில் பெய்த மழையால் கோமுகி அணையின் முழு கொள்ளளவான 46 அடியில், 44 அடி நீர் நிரம்பியது. அதனை, சம்பா சாகுபடிக்கு 100 கனஅடி நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.இந்நிலையில், கோமுகி அணைக்கும் மேமாத்துார் அணைக்கட்டுக்கும் இடையே 11 அணைக்கட்டுகள் உள்ளன. அணையிலிருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேமாத்துார் அணைக்கட்டுக்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.எனவே, மேமாத்துார் அணைக்கட்டு நிரம்பும் வரை தண்ணீர் திறக்க வேண்டுமென மேமாத்துார் அணைக்கட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி