உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  உடைந்த குழாய் இணைப்பு சீரமைக்கப்படுமா?

 உடைந்த குழாய் இணைப்பு சீரமைக்கப்படுமா?

புதுச்சத்திரம்: வயலாமூர்-பெரியக்குமட்டி சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இணைப்பில் ஏற்பட்டுள்ள உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது. வயலாமூர் - பெரியக்குமட்டி இணைப்பு சாலையோரம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இணைப்பு செல்கிறது. இந்த குழாய் இணைப்பில், பெரியக்குமட்டி வடிகால் வாய்க்கால் பாலம் அருகே, உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் ஓடி வீணாகி வருகிறது. தற்போது கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், தண்ணீர் வீணாகி வருவதால் குடிநீர்பெற முடியாமல், பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, வயலாமூர் - பெரியக்குமட்டி சாலையில் உடைப்பு ஏற்கப்பட்டுள்ள, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் இணைப்பை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி