உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

கடலுார் மாநகரில் ஓடும் பல வாகனங்கள் போக்குவரத்து விதியை மீறி செல்வது அதிகரித்து வருகிறது.கடலுார் நகரில் ஓடும் பல வாகனங்களில், போலீசார் ஜீப்களின் மேல் வைத்திருக்கும் நீலம், சிவப்பு, மஞ்சள் கலர் விளக்குகளைப் போல தனியார் கார்களின் முன்பக்கத்தில் வைத்துக்கொண்டு உலா வருகின்றனர். இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு துாரத்தில் இருந்து பார்ப்பதற்கு போலீஸ் வாகனம் போல தோன்றி குழப்பம் ஏற்படுகிறது. மேலும் சிறுவர், சிறுமியர், ஓட்டுனர் உரிமம் பெறாத பெண்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். பல ஆட்டோக்களில் பெரிய வாகனத்தின் ஹார்ன் பொறுத்தி சாலையில் செல்லும் மக்களை மிரண்டு ஓடும் வகையில் ஹாரன் அடிக்கின்றனர்.வாகனங்களில் நெம்பர் பிளேட்டுகளில் நெம்பருக்கு பதிலாக அரசியல் கட்சித் தலைவர்கள் படம், யாருக்கும் புரியாத பாைஷயில் எழுத்து, அரசியல் கட்சி கொடிகள் போன்றவற்றை போட்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் விபத்து நடந்தால் கூட பொதுமக்களால் நெம்பரை பார்த்து சொல்ல முடியாமல் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் வாகன தனிக்கை செய்துஇதுபோன்ற பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி