மரக்கன்றுகள் நடப்படுமா?
மந்தாரக்குப்பம்: கடலுார்-சின்னசேலம் கூட்டு ரோடு வரை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, பணிகள் நிறைவடைந்தன. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின் போது மந்தாரக்குப்பம் பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த ஏராளமான மரங்கள் வேருடன் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் குறைந்த அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிப்பு இல்லாததால் பெரும்பலான மரக்கன்றுகள் கருகிபோய் உள்ளன. சாலைகளில் நன்றாக வளரக்கூடிய மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.