உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணுக்கு சரமாரி வெட்டு: சிதம்பரத்தில் பரபரப்பு

பெண்ணுக்கு சரமாரி வெட்டு: சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம்: சிதம்பரம் சின்னசெட்டித் தெருவை சேர்ந்தவர் நடராஜ். வங்கி நகை மதிப்பீட்டாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த இரு மர்ம நபர்கள், நடராஜனின் மனைவி கோமதியை, 40; சரமாரியாக கழுத்தில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த கோமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
அக் 22, 2025 09:34

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறதுனு முக்கிய மந்திரி பீத்திக்கிறாரு. என்னதாங்க நடக்குது தமிழகத்துல?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை