உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடும்ப தகராறில் பெண் தற்கொலை

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே குடும்ப பிரச்னை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டார். பரங்கிப்பேட்டை அடுத்த வெட்டிக்குளத்தை சேர்ந்தவர் ராஜசேகர். கட்டட தொழிலாளி. இவரது, மனைவி வினிதா, 26; தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் தகராறு ஏற்படவே மனமுடைந்த வினிதா நேற்று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ