உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

வடலுார்: கார் மோதியதில் பைக்கில் சென்ற பெண் இறந்தார். நெய்வேலி, வியாபாரி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், 50; சமையல் மாஸ்டர். இவரது மனைவி ஸ்ரீதேவி, 42; இவர்கள் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாட ஸ்ரீதேவியின் சொந்த ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கடலுார்-விருத்தாச்சலம் சாலையில் நெத்தனாங்குப்பம் அருகே சென்ற போது, பின்னால் வந்த மாருதி ஸ்விப்ட் கார், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தம்பதி கடலுார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில், ஸ்ரீதேவி இறந்தார். சதீஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ