உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெடி கிடங்கு விபத்தில் பெண் பலி

வெடி கிடங்கு விபத்தில் பெண் பலி

பரங்கிப்பேட்டை: சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில், பெண் தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பு.முட்லுார், நாகவள்ளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 55; இவர், பெரியகுமட்டி கிராமத்தில், 'வெங்கடேஸ்வரா பயர் ஒர்க்ஸ்' என்ற பெயரில் நாட்டு வெடி தயாரித்து வருகிறார். இங்கு நேற்று, லதா, 39, வசந்தி, 45, லோகம்மாள், 50, கொடியரசி, 28, மாலதி, 4௦, ஆகிய ஐந்து பேர் மட்டும் பணிக்கு வந்தனர்.காலை, 11:30 மணிக்கு, லதா வெடி மருந்தை கிடங்கில் இருந்து பையில் எடுத்து வந்தபோது, திடீரென தவறி கீழே விழுந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. லதா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெடி மருந்து கிடங்கு தரைமட்டமானது.எஸ்.பி., ஜெயக்குமார், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், டி.எஸ்.பி., லாமேக் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.ஜெயக்குமார் கூறுகையில், ''வெடி மருந்து கிடங்கு உரிமையாளர் சுப்பிரமணியன் விரைவில் கைது செய்யப்படுவார்,'' என்றார்.விபத்து குறித்து பெரியகுமட்டி வி.ஏ.ஓ., குமரேசன் புகாரில், பரங்கிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். லதா குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ