உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் பண்ருட்டி அருகே கொடூரம்

பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் பண்ருட்டி அருகே கொடூரம்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே இட பிரச்னையில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்தசாத்திப்பட்டு, நெல்லிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வைத்தியநாதன், சிங்காரவேல், ராமர். இவர்கள் 3 பேருக்கும் பொதுவான 21 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை பிரிப்பது தொடர்பாக 3 குடும்பத்தினரிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், வைத்தியநாதன் மனைவி சின்னையாள், கடந்த 30ம் தேதி பிரச்னைக்குரிய இடத்தில் வீடு கட்ட முயன்றார். அதற்கு சிங்காரவேல் மனைவி செல்வராணி, 58; எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சின்னையாள் மற்றும் அவரது மகள்கள் அனுராதா, ஜெயந்தி, ஜெயபிரதா ஆகியோர் செல்வராணியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து செல்வராணி மகள் அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார்வழக்குப் பதிந்து அனுராதா,33; என்பவரை கைது செய்து, சின்னையாள், ஜெயந்தி, ஜெயபிரதா ஆகியோரை தேடி வருகின்றனர். இதனிடையே, கடந்த 3ம் தேதிராமரை தாக்கியதாக கொடுக்கப்பட்ட மற்றொரு புகாரில் ஜெயந்தி, அனுராதா, வைத்தீஸ்வரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ