உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

குறிஞ்சிப்பாடி; மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளத்தைச் சேர்ந்தவர் ராஜா,59; தகரக் கூரைகள் அமைக்கும் பணி செய்து வந்தவர். நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடியில் தனியார் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் கம்பெனியில் இரும்பு தகர கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, ராஜா இரும்பு கம்பியை எடுத்த போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது உரசியது. இதில், மின்சாரம் தாக்கி காயமடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை