கடலில் மூழ்கி தொழிலாளி மாயம்
மயிலாடுதுறை; பூம்புகார் கடலில் குளித்த குறிஞ்சிப்பாடி தொழிலாளி, தண்ணீரில் மூழ்கி மாயமானார்.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா வடக்கு மேலுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன்,40. காஸ் ஏஜென்சி தொழிலாளி. இவர், நண்பர்களுடன் நேற்று முன்தினம் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு நேற்று மதியம் பூம்புகாருக்கு வந்தார். அங்கு, மணிகண்டன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தகவலின் பேரில் விரைந்து வந்த பூம்புகார் கடலோர காவல் குழும போலீசார் மீனவர்களுடன் இணைந்து படகுகள் மூலம் கடலில் மூழ்கிய மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.