உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்னல் தாக்கி தொழிலாளி பலி

மின்னல் தாக்கி தொழிலாளி பலி

காட்டுமன்னார்கோவில்: ராஜா சூடாமணியில் நிலத்தில் உரம் போட்ட விவசாய கூலித் தொழிலாளி மின்னல் தாக்கி உடல் கருகி அதே இடத்தில் இறந்து கிடந்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த ராஜ சூடாமணி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் சுப்பிரமணியன், 53; விவசாய தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் மாலை அதே பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவரது நிலத்திற்கு உரம் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் சுப்பிரமணியன் மின்னல் தாக்கி கீழே விழுந்துவிட்டார். இரவு நீண்ட நேரம் ஆகியும் சுப்பிரமணியன் வீட்டிற்கு வரதாதாதல், உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணியன் வைத்திருந்த மொபைல்போன் சிக்னல் மூலம், உரம் போட சென்ற வயலுக்கு சென்று பார்த்தபோது, சுப்பிரமணியன் மின்னல் தாக்கி சேற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக காட்டுமன்னார்கோவில் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ