உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தொழிலாளி தற்கொலை 

 தொழிலாளி தற்கொலை 

புவனகிரி: புவனகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வண்டுராயன்பட்டு மேலத்தெருவை செர்ந்தவர் கண்ணன், 40; கூலித்தொழிலாளி. இவர் மனைவி சத்யா. ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, தம்பதி பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த, 14ம் தேதி, கண்ணன், பூச்சிக்கொல்லி குடித்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மாலை இறந்தார். புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !