உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உலக புத்தக தினம்

உலக புத்தக தினம்

சிதம்பரம் : சிதம்பரம் சமூக சிந்தனையாளர் பேரவை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் உலக புத்தக தின விழா நடந்தது.பேரவை செயலாளர் அறவாழி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நகர செயலாளர் ராகவேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் மனிதன் அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு, புத்தகம் வாசிப்பால் ஏற்படும் இன்பம், மகிழ்ச்சி பற்றி விளக்கி பேசினார்.தமிழ்முல்லை, அண்ணாமலை பல்கலைக்கழகம் கல்பனாசேக்கிழார், மா.கம்யூ., நகர செயலாளர் ராஜா, நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நிர்வாகிகள் கலியமூர்த்தி, பழனி, செல்வநாதன், குமரவேல், பாலாஜி ஆகியோர் புத்தகம் வாசிப்பு குறித்தும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ