உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயாவில் உலகத்தரம் வாய்ந்த கல்வி

ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயாவில் உலகத்தரம் வாய்ந்த கல்வி

வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, குழந்தைகள் கல்வி கற்க ஆரோக்கியமான சூழலுடன் திகழ்வதாக, பள்ளி தலைவர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன் கூறினர்மேலும், அவர்கள் கூறியது:நெல்லிக்குப்பம் அடுத்த வாழபட்டில் கடந்த 2017-2018ம் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்கப்பட்டது. கடலுார் வள்ளி விலாஸ் குழுமத்தின் தண்டபாணி என்பவரின் 100வது ஆண்டை முன்னிட்டு மீனாட்சி சண்முகம் டிரஸ்ட் சார்பில் பள்ளி துவங்கப்பட்டது.ஒழுக்கத்துடன் கூடிய அறிவு சார்ந்த, உலகத் தரம் வாய்ந்த கல்வி அளிப்பது பள்ளியின் நோக்கம். குழந்தைகளின் திறமையை மேம்படுத்தவும், தன்னம்பிக்கை, நற்சிந்தனையை வளர்க்கவும், படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இப்பள்ளியின் கற்பிக்கப்படுகிறது.கடந்த 3 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தாண்டு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்வழி கற்றல் முறையில் கல்வி கற்பதால் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன் ஆர்வத்துடன் கல்வி கற்க முடிகிறது. ஆக்டிவிட்டி அடிப்படையில் கல்வி, கையெழுத்து, ரோபோடிக்ஸ் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.ஆங்கில புலமைக்கு சிறப்பு பயிற்சிகள் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,-நீட் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கடலுார் மற்றும் பண்ருட்டியில் மழலையர் பள்ளிகள் இயங்கி வருகிறது. விஜயதசமி மாணவர் சேர்க்கை நடக்கிறது.பண்ருட்டியில் புதிய பள்ளி கட்டடம் 2025-2026ம் கல்வியாண்டில் திறக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை