உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உலகத்தரம் வாய்ந்த செயின்ட் ஜோசப் கல்லுாரி

உலகத்தரம் வாய்ந்த செயின்ட் ஜோசப் கல்லுாரி

கடலுார்: கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி மாணவர்கள் படிக்கும் போதே தொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்படுகிறது என கல்லுாரியின் செயலாளர் சுவாமிநாதன் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது, கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி பசுமையான சுற்றுச்சூழலில், சிறந்த கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்களில், தகுதியும், திறமையும் வாய்ந்த அனுபவம் மிக்க பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறந்த விளையாட்டு மைதானம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம், திறன் மிக்க மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்குகிறது. திறமையான மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு, படிக்கும் போதே தொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏராளமான வேலைவாய்ப்புகளும், உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதிகள் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ