உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்பு

உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்பு

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'மலேரியாவை முற்றிலும் ஒழிப்போம்' என, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.உலக மலேரியா தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலர் சுரேந்தர் தலைமை தாங்கினார். மருத்துவர் சூரியவேல் முன்னிலை வகித்தார். மருந்தாளுனர் செழியன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், மதனகோபால், முத்துச்செல்வம், ஆய்வக நுட்புநர் இளையராஜா மற்றும் களப்பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.இதில், மலேரியா நோய் பரவும் விதம் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து, மலேரியா உறுதிமொழி எடுக்கப்பட்டது. செவிலியர் மஞ்சுளா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ