மேலும் செய்திகள்
அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு
18-Aug-2025
சிதம்பரம், : சிதம்பரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ஜானகி ராஜா தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் ராகவேந்திரன் வரவேற்றார். பன்னீர்செல்வம் தீர்மானம் வாசித்தார். லட்சுமிபிரியா மொழி வணக்க பாடல் பாடினார். புதுச்சேரி மாநில துணைப் பொதுச் செயலாளர் உமா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத்தலைவர் மூசா, சிதம்பரம் நகராட்சி துணை சேர்மன் முத்துக்குமரன் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலாளர் பால்கி அறிக்கை சமர்ப்பித்தார். மாநில துணைத் தலைவர் ராமச்சந்திரன் நிறைவுறையாற்றினார். தமிழ்மொழிக்கு சொற்ப நிதி ஒதுக்கிய மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பின், நடந்த கருத்தரங்கில் பாரதி தமிழ்முல்லை வரவேற்றார். அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பழனி வாழ்த்திப் பேசினார். எழுத்தாளர் சொர்ணபாரதி, அருணாச்சலம், ராஜேஷ்கண்ணன் கருத்துரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர் மாநில துணை பொதுச் செயலாளர் களப்பிரான் பேசினார். சிதம்பரநாதன் நன்றி கூறினார்.
18-Aug-2025