வடலுாரில் யோகா பயிற்சி வகுப்பு
வடலுார் : வடலுாரில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், யோகா பயிற்சி வகுப்புகள் நடந்தன. டாக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் பரமசிவம், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் துளசிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் டாக்டர் பிரகதீஸ்வரன் கலந்து கொண்டு யோகா செய்வதன் மூலம் அறிவுக்கூர்மை, நினைவாற்றல், ஒழுக்கம் மேம்பாடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ஜெயந்தி, சத்யா, விஜயலட்சுமி, வினோதினி, விமலா, அன்பழகன், வெங்கடேசன், சாரதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.