உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் வாலிபர் கைது

கொலை மிரட்டல் வாலிபர் கைது

நடுவீரப்பட்டு : முன்விரோதம் காரணமாக பைக்கில் வந்தவரை வழிமறித்து கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த நடுபிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் மகன் சித்தேஷ்,23; இவருக்கும் பழைய பிள்ளையார்குப்பம் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்,22; என்பவருக்கும் பைக் மோதிக் கொண்டது தெடார்பாக முன்விரோதம் உள்ளது. சித்தேஷ் தமது மாமாவின் மகனை பைக்கில் பணிக்கன்குப்பம் வழியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஆகாஷ் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து ஆகாைஷ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ