உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  துப்பாக்கி தயாரித்த வாலிபர் கைது  

 துப்பாக்கி தயாரித்த வாலிபர் கைது  

சேத்தியாத்தோப்பு: பிளாஸ்டிக் பைப்பால் துப்பாக்கி தயாரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், பெரியநெல்லிக்கொல்லை, காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த தாஸ் மகன் பாலகுரு, 28; இவர் யூ-டியூப் பார்த்து, அணில் பிடிக்க, பிளாஸ்டிக் துப்பாக்கி செய்து பயன்படுத்தி வந்துள்ளார். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பிளாஸ்டிக் பைப் துப்பாக்கி செய்தவரை கையும் களவுமாக பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து பாலகுருவை கைது செய்து பிளாஸ்டிக் பைப் துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை