வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெண்களுக்கு,மாணவிகளுக்கு மற்றும் குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்களை கைது கூடாது, என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும்.
மேலும் செய்திகள்
அரசு பஸ்சில் லேப்டாப் திருட்டு
29-Oct-2026
கடலுார்: கல்லுாரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி, தாக்கிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர். கடலுார் அடுத்த பில்லாலி தொட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராபின்சன்,23; தனியார் நிறுவன ஊழியர். இவர், நர்சிங் கல்லுாரியில் 2ம் ஆண்டு பிடிக்கும் 19 வயது மாணவியை கடந்த 2 ஆண்டாக ஒருதலையாக காதலித்து வந்தார். இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி அவர் காதலித்தார். இந்நிலையில், நேற்று (நவ.,25) மாலை கல்லுாரி முடிந்து வீட்டிற்கு செல்ல கடலுார் பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ராபின்சன், தன்னை காதலிக்குமாறு மாணவியை தொந்தரவு செய்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில், காயமடைந்த மாணவி கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார், வழக்கு பதிந்து ராபின்சனை தேடிவருகின்றனர்.
பெண்களுக்கு,மாணவிகளுக்கு மற்றும் குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்களை கைது கூடாது, என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும்.
29-Oct-2026