பைக் திருடிய வாலிபர் கைது
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் அருகே பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்பிரசாத். இவர் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது பல்சர் பைக்கை கடந்த 19ம் தேதி இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று விட்டு வந்த பார்த்தபோது காணவில்லை.இதுகுறித்து புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில் மந்தாரக்குப்பம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வழியாக வந்த பைக்கில் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கீழ்பாதி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், 28, என்பதும் அவர் ஒட்டி வந்தது, ராம்பிரசாத்திற்கு சொந்தமான பைக் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்த விசாரிக்கின்றனர்.