உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் வாலிபர் கைது

கொலை மிரட்டல் வாலிபர் கைது

விருத்தாசலம்: வீட்டின் கூரையை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த எருமனுாரை சேர்ந்தவர்கள் மாயவேல் மகன் வேலுசாமி, 24. ராஜேந்திரன் மகன் ராஜதுரை, 28. இருவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ள நிலையில், கடந்த 29ம் தேதி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜதுரை, வேலுசாமி வீட்டின் கூரையை பிரித்து வீசி சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து, ராஜதுரையை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ