உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாட்டு துப்பாக்கியுடன் வாலிபர் கைது

நாட்டு துப்பாக்கியுடன் வாலிபர் கைது

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஆலடி பகுதியில், நாட்டுத் துப்பாக்கியுடன் வாலிபர் சுற்றித் திரிவதாக குற்ற நுண்ணறிவு தடுப்புப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராபின் ஜெரால்டு, ஏட்டு மணிகண்டன் ஆகியோர் நேற்று காலை பாலக்கொல்லை பால் பண்ணை அருகே நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து 100 கிராம் ஆகியவற்றுடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.விசாரணையில், அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அன்னை தெரசா நகரை சேர்ந்த முத்து, 35; என்பதும், வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கி, வெடி மருந்துடன் சுற்றித் திரிந்ததும் தெரிந்தது. உடன், அவரை ஆலடி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் செய்தனர்.இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, முத்துவை கைது செய்து, நாட்டுத்துப்பாக்கி, வெடி மருந்து, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ