உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

சிதம்பரம்: சிதம்பரத்தில் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாலிபர் தீக்குளிக்க தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. சிதம்பரம் அடுத்த கிள்ளையைச் சேர்ந்தவர் அஜித்குமார், 32; இவர், நேற்று மதியம் சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷன் எதிரில் நின்று கொண்டிருந்தார். திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண் ணெய்யை தன மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. உடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அஜித்குமாரை மீட்டு, விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Artist
செப் 12, 2025 09:13

டெக்சாஸ் நகருக்குள்ளேயே ஏகப்பட்ட டோல் சாலைகள் ..அவற்றில் சீக்கிரமாக பயணிக்கலாம் எரிபொருள் மிச்சமாகும் ..அரசாங்கம் மதுவிற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் சாலைகள் தனியாரால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன ..உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்த சாலைவசதிகள் இந்தியாவில் தான்


புதிய வீடியோ