உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கத்தியுடன் பிடிபட்ட வாலிபர்; போலீஸ் தீவிர விசாரணை

கத்தியுடன் பிடிபட்ட வாலிபர்; போலீஸ் தீவிர விசாரணை

பண்ருட்டி; பண்ருட்டி அருகே கத்தியுடன் பைக்கில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த திருவதிகையில் நேற்று மாலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கில் இருவர் வந்தனர்.அவர்களை நிறுத்தி விசாரித்தனர். திருச்சி துறையூர், செல்லியம்பாளையம் தாலுக்கா பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சரண்,26; விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சரணின் நண்பர் ஒருவர் என தெரியவந்தது.அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அப்போது திடீரென சரணின் நண்பர் தப்பி ஒடிவிட்டார்.போக்குவரத்து போலீசார் சரணை பண்ருட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ