உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளைஞர் காங்., தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம்

இளைஞர் காங்., தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இளைஞர் காங்., வேட்பாளர்களை, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அறிமுகம் செய்து வைத்தார்.கடலுார் மேற்கு மாவட்ட இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் அறிமுகம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் விருத்தாசலம் ரஞ்சித்குமார், மங்கலம்பேட்டை வேல்முருகன், நெய்வேலி ஸ்டீபன் முன்னிலை வகித்தனர். விவசாய பிரிவு தலைவர் ஜெயகுரு வரவேற்றார்.அதில், உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முன்னதாக, இளைஞர் காங்., தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எம்.எல்.ஏ., அறிமுகம் செய்து வைத்தார். வட்டார தலைவர்கள் ராவணன், பீட்டர், சாந்தகுமார், ஜெய்சங்கர், முருகானந்தம், ராமச்சந்திரன் உட்பட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ