மேலும் செய்திகள்
வீடுகள் முன்பாக தேங்கும் கழிவுநீரால் அவதி
20-Jan-2025
கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்அரூர்,:தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., 8வது வார்டுக்கு உட்பட்ட மக்கான் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் வசதியில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மனித கழிவுகள் தெருக்களில் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனால் ஏற்படும் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது. மேலும், மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்குகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் சிமென்ட் சாலை அமைக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Jan-2025