உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தக்காளியில் மதிப்பு கூட்டு பொருள்தயாரிப்பு ஆலோசனை கூட்டம்

தக்காளியில் மதிப்பு கூட்டு பொருள்தயாரிப்பு ஆலோசனை கூட்டம்

தக்காளியில் மதிப்பு கூட்டு பொருள்தயாரிப்பு ஆலோசனை கூட்டம்தர்மபுரி:தக்காளியில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பது குறித்து, பாலக்கோட்டில் துணை கலெக்டர் சவுந்தர்யா ஆலோசனை நடத்தினார்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கரகூர், பெல்ரம்பட்டி, சீரியம்பட்டி, திருமல்வாடி, அமானிமல்லாபுரம், கரகதஅள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெருமளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் விளைவிக்கும் தக்காளியை பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் விற்பனை செய்து செய்கின்றனர். இங்கிருந்து, உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச்சென்று, கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர்.இதில், சில சமயங்களில் ஒரு கிலோ தக்காளி, 100 ரூபாய் வரை விற்பனையாகும். சில நேரங்களில் கிலோ ஒரு ரூபாய் வரை விலை குறைந்து, விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, தக்காளி கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், பாலக்கோடு பகுதியில் தக்காளியை பதப்படுத்தி, தக்காளி ஜூஸ், பூரி, சாஸ் தயாரிக்கும் வகையில், தொழில் தொடங்க ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்பிக்க, தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் ஆலோசனை படி, துணை கலெக்டர் சவுந்தர்யா, பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நேற்று ஆய்வு செய்து, தக்காளி விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் உழவர் சங்கத்தினரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.இதில், வேளாண் வணிகம் துணை இயக்குனர் இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர் கங்கா, வேளாண் அலுவலர் சிவசக்தி, பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ