டவுன் பஞ்., இரவு காவலர் தற்கொலைவழக்கு: சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
நாமக்கல்:நாமகிரிப்பேட்டை அண்ணா காலனியை சேர்ந்த முருகன், 42, என்பவர், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வருகிறேன். என் தந்தை பரம சிவம், 65, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., இரவு காவலராக பணியாற்றி வந்தார். கடந்த, 2022 செப்., 19ல், கை, கால்கள் கட்டப்பட்டு, துாக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். இவரது இறப்பு சம்பந்தமாக, நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.என் தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதால், நாமகிரிப்பேட்டை போலீசார் இந்த வழக்கை விசாரிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், தற்கொலை எனக்கூறி வழக்கை முடிக்க முயற்சிப்பதால், தமிழக முதல்வர், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.