மேலும் செய்திகள்
வரி செலுத்தாமல் இயக்கிய வாகனங்களுக்கு அபராதம்
09-Jan-2025
தர்மபுரி, :தர்மபுரி மாவட்டத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சீட் பெல்ட் அணிதல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர் சாந்தி கூறியதாவது:சீட் பெல்ட் அணிவதால், சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும். மேலும், வாகனங்களை இயக்கும் போது மிதமான வேகத்துடன் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை உபயோகிக்காமல் சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து, விபத்தில்லா தர்மபுரி மாவட்டமாக மாற, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், எஸ்.பி., மகேஸ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் தரணிதரன், பாலசுப்ரமணியன், வெங்கிடுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
09-Jan-2025