உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டுனர் தினம் கொண்டாட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டுனர் தினம் கொண்டாட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டுனர் தினம் கொண்டாட்டம்தர்மபுரி, : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தர்மபுரி மண்டலம் சார்பில், சாலை பாதுகாப்பு மாதம் ஜன., 1 முதல் ஜன., 31 வரை கடைபிடிக்கபடுகிறது. இதில், பொது மேலாளர் செல்வம் தர்மபுரி டவுன் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டில் 'வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடம்', 'சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு' தொடர்பான விபத்தில்லா பயணத்தின் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தர்மபுரி புறநகர் கிளையில் ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். துணை மேலாளர்கள் மண்டல பயிற்சி மையத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை