உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்அரூர்:அரூர் அருகே, சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைகோட்டையை சேர்ந்தவர் ஆசிப்கான், 48. இவர் நேற்று மதியம், 4:00 மணிக்கு அரூர் நோக்கி, டாடா இண்டிகா காரில் சென்றார். அரூர்-சேலம் சாலையில், எச்.தொட்டம் பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனே, காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, ஆசிப்கான் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில், காரில் மளமளவென தீ பரவியது. சம்பவ இடம் வந்த அரூர் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ