உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி ஆண்டு விழாவில்கல்வி சீர் வழங்கிய மக்கள்

பள்ளி ஆண்டு விழாவில்கல்வி சீர் வழங்கிய மக்கள்

பள்ளி ஆண்டு விழாவில்கல்வி சீர் வழங்கிய மக்கள்தர்மபுரி:தர்மபுரி அடுத்த, குப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட சித்தன் கொட்டாயில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிஆண்டு விழா மற்றும் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெயக்கொடி தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியை அஜிதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி அன்புமணி, துணைத்தலைவி ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முருகன், முன்னாள் மாணவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டு விழாவை முன்னிட்டு, ஊர் பொதுமக்கள் சார்பாக, கல்வி சீர்வரிசைகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் தலைமையில், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி யிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ