மேலும் செய்திகள்
சின்னேப்பள்ளியில்எருதுவிடும் விழா
12-Feb-2025
அலசப்பள்ளியில் எருது விடும் விழாசீறி பாய்ந்தோடிய 255 காளைகள்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, பாகலுார் - பேரிகை சாலையிலுள்ள அலசப்பள்ளி கிராமத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு அனுமதியுடன், நேற்று எருது விடும் விழா நடந்தது. சூளகிரி, பேரிகை, பாகலுார் மட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான காளைகள் வந்திருந்தன. கால்நடை பராமரிப்பு துறையினர் மொத்தம், 263 காளைகளை பரிசோதித்ததில், 8 காளைகள் உடல்நிலை பாதித்துள்ளதாக கூறி, அவற்றை நிராகரித்தனர். மீதமுள்ள, 255 காளைகள், விழா திடலில் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர். இதில், 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விழாவை காண, 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். பாகலுார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் (பொறுப்பு), தலைமையில், 75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
12-Feb-2025