உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மஹா சிவராத்திரியையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மஹா சிவராத்திரியையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மஹா சிவராத்திரியையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதர்மபுரி:தர்மபுரி மாவட்டம், பி.எஸ்.அக்ரஹாரத்திலுள்ள மரகதாம்பிகா சமேத ஸ்ரீமார்க சகாய ஈஸ்வரன் கோவிலில் மஹா சிவராத்திரியையொட்டி, நேற்று மாலை முதல், நான்கு கால பூஜை தொடங்கியது. இதில், பால், இளநீர், சந்தனம், தேன், குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள் பாலித்தார்.அதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவனேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் அபிதகுஜாம்பாள் ஆருண்ணேஸ்வரர், அதியமான்கோட்டை சோமேஷ்வரர் மற்றும் சோளேஷ்வரர், தர்மபுரி டவுன் ஆத்துமேடு சர்வாங்கசுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர், அரசநாதர், லளிகம் மல்லிகார்ஜூன ஈஸ்வரர், கொளகத்துார் புற்றிடங்கொண்ட நாதர் கோவில், நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் உட்பட மாவட்டத்திலுள்ள, பல்வேறு சிவன் கோவிலில், சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில், மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. இதேபோன்று இருளப்பட்டி காணியம்மன் கோவில்,பொம்மிடி அருணாசலேஸ்வரர் கோவில், புளியம்பட்டி பஸ்வேசுவரர் கோவில், பாப்பிரெட்டிப்பட்டி ஈஸ்வரன் கோவிலில் நடந்தது.* மஹா சிவராத்திரி விழாவையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை கிரிஜாம்பாள் உடனுறை கவீஸ்வரர் கோவிலில், நான்கு கால பூஜை, பழையபேட்டை பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவில் மற்றும் புதுப்பேட்டை பிரசன்ன பார்வதி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், ஆறு கால பூஜை நடந்தது. அதே போல், காவேரிப்பட்டணம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில், ஆவல்நத்தம் காசீஸ்வர பசவேஸ்வர சிவகுமார சுவாமி கோவில் என, மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று மாலை, 6:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவன் அருள் பாலித்தார். வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ