உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனகாவலர், காப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

வனகாவலர், காப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

தர்மபுரி, தமிழகத்தில் வனத்துறையில் காலியாக உள்ள வனகாவலர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதையடுத்து நேற்று, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில், 53 வனகாவலர்கள், 35 வனக்காப்பாளர்கள், 4 ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில், 92 பேர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ