உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குப்பூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

குப்பூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

குப்பூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைதர்மபுரி:தர்மபுரி அருகே, குப்பூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா கடந்த, 28ல் நடந்தது. அப்போது, புதிய மாணவர்கள் சேர்க்கை நடந்தது.தர்மபுரி மாவட்டம், குப்பூர் பஞ்., ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதில், தலைமை ஆசிரியர் சித்துராஜ் தலைமை வகித்தார். தர்மபுரி வட்டார கல்வி அலுவலர் நாசர், பி.டி.ஓ., மற்றும் வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர் அருண்குமார், முன்னாள் பஞ்., தலைவர் மாது, விவசாய சங்க செயலாளர் சக்திவேல் உட்பட பலர் பேசினர். இதில், நடப்பு கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தன்னார்வலர்கள், பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் இணைந்து, 30,000 ரூபாய் மதிப்பில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உட்பட பள்ளிக்கு சீர் வழங்கினர்.தொடர்ந்து, கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும், வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், அதிக வருகை பதிவு கொண்ட மாணவர்களுக்கும், நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாட்டை பள்ளி இருபால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை