உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விவசாயி மீது வழக்குரத்து செய்யக்கோரி மனு

விவசாயி மீது வழக்குரத்து செய்யக்கோரி மனு

விவசாயி மீது வழக்குரத்து செய்யக்கோரி மனுநாமக்கல்:கொ.ம.தே.க., நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனுார் தாலுகா, ஆண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணியன், தன் தோட்டத்தில் மண்ணை வெட்டி எடுத்து, சீர்திருத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, மாவட்ட கனிமவளத்துறை மூலம் புகார் செய்யப்பட்டு, மோகனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மண் அள்ளியதும், கொட்டியதும் இரண்டுமே ஒரே சர்வே எண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது, எந்த முகாந்திரம் இல்லாமல் பதியப்பட்ட தவறான வழக்கை உடனடியாக கலெக்டர் விசாரணை செய்து, அப்பாவி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி