உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உலகம் வெப்பமயமாதலை தடுக்க பைக் பயணம்

உலகம் வெப்பமயமாதலை தடுக்க பைக் பயணம்

உலகம் வெப்பமயமாதலை தடுக்க பைக் பயணம்கிருஷ்ணகிரி:கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் கண்ணன், 48. கார்பென்டர். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவரது மகன் தர்ஷன், 15. இருவரும் இயற்கை மீதுள்ள பற்றால், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தியும், மரம் வளர்ப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கன்னியாகுமரி முதல் ‍டில்லி வரை விழிப்புணர்வு பைக் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த மார்ச், 23ல் கன்னியாகுமரி வள்ளுவர் கோட்டத்திலிருந்து பைக் பணத்தை துவக்கினர். நாளொன்றுக்கு, 150 முதல், 200 கி.மீ., தொலைவு வரை பயணம் மேற்கொள்ளும் இவர்கள், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி வந்தனர். நேற்று காலை ஓசூர் புறப்பட்டனர். அங்கிருந்து, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் வழியாக டில்லி செல்ல உள்ளனர். இது குறித்து கண்ணன் கூறியதாவது: புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி, பசுமை கிராம சங்கம் சார்பில், டூவீலரில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளோம். கல்லுாரி மாணவ, மாணவியரிடம், மாசு கட்டுப்பாடு, மரங்கள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அவர்கள் உலக வெப்பமயமாதலை தெரிந்து கொண்டால் தான், மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை