புட்டிரெட்டிபட்டி வட்டார மையத்தில் தொழில் நுட்ப மேலாண்மை முகாம்
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, புட்டிரெட்டிபட்டி கிராமத்தில், மொரப்பூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் பட்டு வளர்ச்சித் துறை சார்பில், பட்டு விவசாயிகளுக்கு விரிவாக்க சீரமைப்பின் கிழ், பண்ணைப்பள்ளி பயிற்சி, மொரப்பூர் வேளாண்மை உதவி இயக்குனர் பழனிவேல் தலைமையில் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள் பங்கேற்றனர். ஆறு நாட்கள் நடந்த பயிற்சி முகாமில், இரட்டை கலப்பின வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் குறித்து, விஞ்ஞானி முத்துலட்சுமி விளக்கம் அளித்தார். தொடர்ந்து, வயல்வெளி செயல்முறை விளக்க கண்காட்சியில் பட்டு செடி வேர் அழுகல் நோயினை கட்டுப் படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு, விரிவாக விளக்கினார். முனைவர் சசிகலா, நடராஜன், ரம்யா உள்பட பலர் பங்கேற்றனர்.