உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.4.56 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

ரூ.4.56 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துாரில், வார ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிலை வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்-படி நேற்று நடந்த சந்தையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதி சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். இங்கு, மணியம்பாடி நல்ல குட்லஹள்ளி, கோம்பை, அஸ்தகியூர், முத்தனுார், கேத்திரெட்டிப்பட்டி, அய்யம்-பட்டி, வேப்பிலைபட்டி, உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிரா-மத்தை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த வெற்றி-லையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலை, 8,000 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 18,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆரம்ப விலை, 9,000 முதல் அதிகபட்சமாக, 19,000க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, 1,000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது, இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரே நாளில், 4.56 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை