பா.ம.க., கொடியேற்று விழா
பா.ம.க., கொடியேற்று விழாகடத்துார்,:கடத்துார் அருகே, பா.ம.க., வன்னியர் சங்கம் கொடியேற்று விழா நடந்தது.தர்மபுரி, பா.ம.க., கிழக்கு மாவட்டம், கடத்துார் வடகிழக்கு ஒன்றியம், போசிநாய்க்கனஹள்ளியில் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் கொடியேற்று விழா, வீர வன்னிய மகாராஜா சிலை திறப்பு விழா, மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில் தலைமையில் நடந்தது.தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில செயலாளர் வேலுச்சாமி, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்து, வீர வன்னிய மகாராஜா சிலையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மதியழகன், சிவக்குமார் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் செல்வம் பவ்யா, சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் பூபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்