மின் சிக்கனம் விழிப்புணர்வு பயிற்சி
மின் சிக்கனம் விழிப்புணர்வு பயிற்சிபாலக்கோடு:வெள்ளிசந்தையில் மின்வாரியம் சார்பில், மத்திய திறனுாக்க செயலகம், மின் பகிர்மான கழகம் இணைந்து, விவசாயிகளுக்கு மின் சிக்கனம் மற்றும் திறன் பயிற்சி நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தை யில், மின்வாரியம் சார்பில், மத்திய திறனுாக்க செயலகம் மற்றும் மின் பகிர்மான கழகம் இணைந்து, விவசாயிகளுக்கு மின் சிக்கனம் மற்றும் மின்திறன் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. வெள்ளிசந்தை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தலைமை வகித்தார். இதில், உதவி செயற்பொறியாளர்கள் மோகன்குமார், அருண்பிரசாத் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.பொதுமக்கள், விவசாயிகள், மின்சாரத்தை சேமிக்கும் வகையில், வீடுகளில் சி.எப்.எல்., எல்.ஈ.டி., பல்புகளை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும்போது, மின்விசிறி, மின்விளக்கு, ஏ.சி., ஆகியவற்றை அணைக்க மறக்கக்கூடாது. நட்சத்திர குறியீடு, ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட மின்சாதனங்களை உபயோகிப்பதால், மின்சார பயன்பாடு குறையும், சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கலாம் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, பாதுகாப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதுடன், விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில், பாலக்கோடு, வெள்ளிசந்தை, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தென்னங்கன்று மற்றும் சான்றிதழ் வழங்கினர்.