உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:பணி பாதுகாப்பை உறுதி செய்ய கோரி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைவேல் தலைமை வகித்தார். இதில், அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடன் இயற்றிட வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பை, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, மீண்டும், 25 சதவீதமாக ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.* பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. வட்ட தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். நில அளவை சங்க வட்ட தலைவர் சிவசங்கரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க பொருளாளர் வினோத் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை பிரிவு அலுவலர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.* அரூர் தாலுகா அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் சின்னன்னன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தாசில்தார் ஜெய் செல்வம் தலைமை வகித்தார். வட்டத்தலைவர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் சதாசிவம், செயலாளர் பெருமாள், சிவஞானம், கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர் சங்க வட்ட தலைவர் தணசேகரன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை