மேலும் செய்திகள்
விபத்தில் முதியவர் சாவு
24-Jun-2025
அதியமான்கோட்டை, தர்மபுரி அருகே, எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 18. இவர் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள, தனியார் மருத்துவ மனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு வேலை முடிந்த பின், அவருடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். அப்போது, காரவோணி - எட்டிமரத்துப்பட்டி சாலையில், எதிரில் வந்த டிராக்டர் ஸ்கூட்டர் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த முத்துலட்சுமியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்துலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jun-2025